அன்பு நண்பர்களே . வணக்கம்..
நான் முகமறியாதவனாக இருக்கலாம்..அடையாளம் தெரியாதவனாகக் கூட இருக்கலாம் . ஆனால் எனக்கும் உங்களுக்குமான முகவரியும் அடையாளமும் ஒன்றே தான் . இந்த மண்ணும் மண்ணின் பண்புகளும் , மொழியும் மொழியின் பெருமைகளும் , இனமும் இனத்தின் சிறப்புகளும் தான் இது பற்றிய சிந்தனைகளும் தான் நமக்கான ஒற்றுமை.. நம்முடைய தொன்மை நிறைந்த மொழியை திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறார்கள்.. மண்ணின் வளத்தை அதிகாரச் செருக்கில் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனத்தின் பழமையை புதை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் … இந்த நிலை இனியும் நீடித்தால் நமக்கான முகவரியும் அடையாளமும் வருங்காலத்தில் நமது பரம்பரைக்கு தெரியாமலேயே போய்விடும்.. இது உங்களுக்கும் தெரியும்.. எனக்கும்.தெரியும் . எனினும் நாம் தனித்தனி களங்களில் நின்று கொண்டிருக்கிறோம் .. நாம் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் .. உங்களைப் போல பிரிந்து பயணம் செய்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்களும். ஆர்வலர்களும். உணர்வுள்ளவர்களும் இந்தத் தருணத்தில் ஒன்றாவதே நம்மைச் சுமக்கும் ,இந்த மண்ணுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும் .நண்பர்களே , உங்களது தனித் தன்மையை நீங்கள் இழக்க வேண்டாம் . இலக்கு ஒன்றே தான் என்கின்ற போது பிரிந்து போராடும் நம்மவர்கள் ஓரணியில் திரண்டால் இனம் , மொழி , மண் காக்கப்படும் . நண்பர்களே நாம் இணைவோம் ! அனைவரும் ஒன்றாவோம் ! தடைகளைத் தகர்த்தெறிந்து தனிப் பெரும் இனம் தமிழினம் என்று தரணிக்கே உணர்த்திடுவோம் !
***********************
என்றும் தங்கள் அன்புடன்
தலைவர்